யாழ்.மல்லாகம், சுன்னாகம், மருதனார்மடம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(31.5.2022) வாகனங்களுக்கான டீசல் விநியோகம் இடம்பெற்றது.

இந்த நிலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த பகுதிகளில் மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் நீண்ட நேரம் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, குறித்த பகுதிகளின் வீதிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் தரித்து நின்றமையால் போக்குவரத்துச் செய்வோர் சிரமங்களை எதிர்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Von Admin