கனடாவில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 59 வயதுடைய தமிழர் ஒருவர் துர்ஹாம் பிராந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

துர்ஹாம் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதான சந்தேகநபருக்கு எதிராக அநாகரீகமான சட்டம் மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். புதிய தகவல்களை கோரும் பொலிஸார் கடந்த மாதம் 24ம் திகதி பேருந்துக்காக காத்திருந்த இரு பெண்களிடம் குறித்த நபர் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 25ம் மற்றும் 26ம் திகதிகளிலும் இதேபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ajax நகரை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Von Admin