யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் உள்ள உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் புகையிரத்துடன்
மோதுண்டதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச்சம்பவமானது நேற்றையதினம் இரவு 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் மோதியே இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தென்னிலங்கையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Von Admin