• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் காணாமல்போன ஆட்டோக்கள்.

Jun 22, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச மற்றும் தனியார் சேவைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேலும், சில மாதங்களாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகலாக காத்திருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் யாழிலும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்கின்றது.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடை அடுத்து துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் யாழின் பிரதான வீதிகளில் உள்ள ஆட்டோ தரிப்பிடங்களில் ஆட்டோக்கள் இல்லாது வெறுமையாக காட்சியளிக்கின்றது.

பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் நிலையிலேயே ஆட்டோ தரிப்பிடங்களில் ஆட்டோக்கள் இல்லாது வெறுமையாக காட்சியளிப்பதாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed