• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம் .

Juni 27, 2022

விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய்யை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க இராணுவத்தினர் முயற்சித்தமையால் யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்தனர். அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள முண்டியடித்தனர்.அதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும், ஏனையோருக்கு வழங்க முடியாது எனவும் கூறினார்கள்.

அத்தனையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் பதிவுகளை முன்னெடுத்தனர். அதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் , கோப்பாய் பிரதேச செயலரும்.புத்தூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாருக்கும் அறிவிக்கப்பட்டது அதனை அடுத்து மண்ணெண்ணெய் விவசாயிகளுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்க உள்ளோம்.ஏனையோருக்கு விநியோகிக்க முடியாது என இராணுவத்தினருக்கு தெரிவித்ததை அடுத்து, இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடை நிறுத்தினார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed