தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் 22  பாடசாலை மாணவர்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (25-06-2022) இரவு இடம்பெற்றுள்ளது. 

கேளிக்கை விடுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டு அவர்கள் இறந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லாததால் உயிரிழப்பில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் கேளிக்கை விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த 22 பேரும் பாடசாலை மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் அனைவரும் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். தென்னாப்பிரிக்காவில் 18 வயது நிரம்பாதவர்கள் மது அருந்துவது சட்டப்படி குற்றமாகும்.

மாணவர்கள் 22 பேரும் உயர்நிலைப் பாடசாலை தேர்வுகள் முடிந்ததைக் கொண்டாடுவதற்காக கேளிக்கை விடுதிக்கு சென்றபோது அவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Von Admin