• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தொண்டமனாறு பகுதியில் நான்கு பேர் கைது.

Jul 6, 2022

யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து, படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல் துறை  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக அதிகாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது.

படகு ஒன்றுக்கு தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து காவல் துறை  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed