• Sa.. März 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜனாதிபதி மாளிகையில் நள்ளிரவில் நடந்த விருந்து

Juli 10, 2022

கொழும்பு கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டகாரர்கள் அரச தலைவர் மாளிகை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து, நீர் விளையாட்டுகளை விளையாடிய நிலையில், இரவு உணவாக சோறு சமைக்க தயாராகும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

அரச தலைவர் மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் அறைகளில் நடந்து சென்று வசதியான இருக்கைகளில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

சிலர் அரச தலைவர் மாளிகையின் மேற்கூரையில் ஏறி தேசியக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர்.

அரச தலைவர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்களும் பேருந்துகளில் வெளியேறுவதைக் காண முடிந்ததாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்தது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed