• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐரோப்பாவை வாட்டும் அதியுச்ச வெப்ப நிலை!

Jul 14, 2022

தீ அபாயத்தைக் குறைக்கும் நோக்குடன் பிரான்சின் தேசிய தினத்தில் பாரம்பரிய வானவேடிக்கை காட்சிகளை அந்த நாட்டு அதிகாரிகள் மீளெடுத்துள்ளனர்.

ஐரோப்பாவில் இரண்டாவது மிகவும் அதீத வெப்பமான ஜுன் மாதத்திற்கு பின்னர், மேற்கு ஐரோப்பா கோடையின் இரண்டாவது ஆபத்தான வெப்ப அலையை எதிர்கொள்கிறது.

பிரித்தானியா, போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெப்பநிலையானது இந்த வாரம் சாதனை மட்டத்தை பதிவு செய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தொடரும் வெப்பமான நிலைமை, தென்மேற்கு ஐரோப்பாவில் நடந்து வரும் காட்டுத் தீயை மேலும் தீவிரமாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கல்லின் 14 மாநிலங்களிலும் ஸ்பெய்னின் கிழக்கு பிராந்தியத்திலும் இவ்வார இறுதியில் அதியுச்ச வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

பிரித்தானியாவிற்கு வெப்ப அலை பரவுவதற்கு முன்னர் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலும் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ்சை தாண்டி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாரத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பகுதிகளில் அதீத வெப்பநிலை பதிவாகும் என பிரித்தானிய வானிலை அலுவலகம் எதிர்வுகூறியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed