• Mi.. März 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அவுஸ்திரேலியாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த வானம்

Juli 23, 2022

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மில்துரா நகர் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் வானத்தை ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். 

இந்நிலையில் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்ததற்கு காரணம் ஏலியன்கள் என்றும், அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்றும் சிலர் கூறினர். ஆனால் இந்த காரணங்கள் தவறானவை.

இது தொடர்பாக கேன் குழுமத்தின் நிர்வாக அதிகாரி பீட்டர் ரோக் விளக்கம் அளித்துள்ளார். அதாவது மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான நோக்கங்களுக்காக கஞ்சா செடியை பயிரிடுவதற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளது. 

அதன் பிறகு கஞ்சா செடிகள் பூக்கும் நேரத்தில் ஒரு விதமான ஒளி பயன்படுத்தப்படும். இதனையடுத்து நேற்று ஆராய்ச்சிக்காக விளக்குகளை அணைக்காமல் இருந்ததால் தான் வானம் பிங்க் நிறத்தில் காட்சியளித்துள்ளது. 

மேலும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் போது அதில் எல்இடி விளக்குகளை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed