அக்கரையான் முழங்காவில் வீதியில் சிசு ஒன்று பொலிசாரால் மீட்கபட்டுள்ளது.

முழங்காவில் அக்கறையான் பிரதான வீதிக்கு அருகே உள்ள  உள்ளக வீதி ஒன்றில் நேற்றைய தினம் இரவு வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட நிலையில் விட்டு சென்றுள்ளனர்.

பிறந்து இரண்டு அல்லது மூன்று நாள் கொண்ட குழந்தை ஒன்று பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குழந்தை மீட்கப்பட்டு அக்கரையான் வைத்தியசாலையுடாக  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Von Admin