கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவு செய்பவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, இணையவழியில் நேரம் மற்றும் திகதியினை முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. 

இதேவேளை, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

இதனால், விண்ணப்பதாரிகள் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தமக்குரிய நேரம் மற்றும் திகதியினை முற்கூட்டியே பதிவு செய்வதன் ஊடாக தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Von Admin