பிரான்ஸில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் துகேத் (Touquet) கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு மருத்துவ உதவி குழு வந்து சேர்ந்த போது அவர் உயிரிழந்ததாகவும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் தனது குடும்பத்தினருடன் கடற்கரைக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பாரிஸில் வாழும் 47 வயதான நபரே இவ்வாறு உயிழிழந்துள்ளார்.

இரவு 9.50 மணியளவில் நபர் ஒருவர் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதனை பெண் ஒருவர் அவதானித்து கூச்சலிட்டுள்ளார். எனினும் அதற்கு அவர் முழுமையாக மூழ்கிய நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் அவரை காப்பாற்றுவற்கு நடவடிக்கை எடுத்துடன்,  தண்ணீரில் மூழ்கியவரை  கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்தனர்.எனினும்  அது பலனிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Von Admin