பாண் இறாத்தலின் நிறை மற்றும் விலை குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாண் இறாத்தலின் நிறை மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் எழுந்துள்ள குழப்பம் காரணமாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கோதுமை மா, சீனி என்பனவற்றின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பணிஸ் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கேள்வி எழுந்துள்ளது.

எனவே, இது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Von Admin