• So. Nov 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழர்களின் உணவை புகழ்ந்துதள்ளிய வெளிநாட்டவர்கள்

Aug 12, 2022

இந்தியா – தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு செஸ் வீரர்கள், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், விடுதியில் ஜெர்மன் செஸ் வீரர்கள் நேராக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று அங்கு உணவு உட்கொண்டுள்ளனர்.

ரசம், சாம்பார், பொரியலுடன் தலை வாழை இலை சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிட்ட அவர்கள், அந்த மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஓட்டலில் நல்ல உணவு சாப்பிட்டதாக ஜெர்மன் நாட்டு செஸ் வீரர் கீர்ட்வான் டேர் வெல்டே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் குரு ECR இல் இன்றிரவு என் எனக்கு மற்றொரு அற்புதமான இரவு உணவை சாப்பிட கிடைத்ததென புகைப்படத்துடன் அவர் அதனை பதிவிட்டுள்ளார்.

அதேவேளை தமிழகத்தில் இடம்பெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் செஸ் வீரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் உணவை புகழ்ந்துதள்ளிய  வெளிநாட்டவர்கள்! | Foreigners Praised Tamil Food
தமிழர்களின் உணவை புகழ்ந்துதள்ளிய  வெளிநாட்டவர்கள்! | Foreigners Praised Tamil Food
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed