ஐரோப்பா வட்டாரத்தின் வறட்சி நிலவரம் மிக   மோசமடைவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இம்மாதத் தொடக்கத்திலிருந்து வறட்சி மோசமடைந்துவருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டு ஆய்வு நிலையத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

அந்தவகையில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லந்து, உள்ளிட்ட இடங்களில் வறட்சி மோசமடையும் என்று முன்னுரைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய வட்டாரத்தில் கிட்டத்தட்ட 17 விழுக்காட்டு இடங்கள் உச்ச விழிப்புநிலையில் இருக்கவேண்டுமெனக் கூறப்பட்டது.

இம்மாதம் சில பகுதிகளில் பெய்த மழை வறட்சியைத் தணிக்க உதவினாலும் இடிமின்னல்கள் தனிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது.

Von Admin