அமெரிக்காவில்  பள்ளி வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு சிறுவர்கள் படுகாமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயர்நிலைப்பள்ளி அருகே ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. அங்கு நேற்று மதியம் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.

அத்துடன் உடனடியாக துப்பாக்க்கிசூடு நடத்திய  அந்த  மர்ம நபர் வாகனத்தில் ஏறி தப்பி விட்டார்.

இந்த துப்பாக்கிசூட்டில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 15 வயது சிறுவன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய  நபரைத் தேடி கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Von Admin