வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று  27அம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

பிரதம குரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று மாலை 4:30 மணியளவில் கொடியேற்றப்பட்டு மஹோற்சவம் ஆரம்பமானது.

செப்டம்பர் 6அம் திகதி கைலாச வாகனமும், செப்டம்பர் 8அம் திகதி சப்பறத் திருவிழாவும், செப்டம்பர் 9அம் காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

செப்டம்பர் 10அம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11அம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.

Von Admin