நெல்லியடி பழைய சந்தைக்கு பின்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) நண்பகல் வயோதிபரின் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் உப்புக்கிணற்றடி, அல்வாய் மேற்கை சேர்ந்த கந்தவனம் அருமைராசா (வயது-75) என்பவராவார்.

இவ் மரணம் தொடர்பில் கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Von Admin