• Sa.. Juni 21st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் விபத்து. மூவர் காயம்

Sep. 4, 2022

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று(04) மாலை 4.30 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரொன்று

வேகக்கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவன் கால் முறிந்த நிலையிலும் 48 வயதுடைய தந்தையும் 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்துள்ளனர்.

கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சுவேலிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.