யாழ்.சாவகச்சோி – மீசாலை பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் தொழிச்சாலைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது ஒட்டுத் தொழிற்சாலையில் காணப்பட்ட மூன்று இலட்சத்து 75,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.