ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வரும் நிலையில், பள்ளி வாசல் அருகே வெடிகுண்டி வெடித்ததில் பல உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அங்கு தாலிபான் கள் ஆட்சி நடந்து வருகிறது. பழமை வாதத்திற்கு ஆதரவாக தாலிபான் கள் இருப்பதாகவும் பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில்   உள்ள மசூதி அருகில், இன்று ஒரு குண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு விபத்தில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

Von Admin