யாழ்.மாவட்டத்தில் 9 வயது சிறுமி உட்பட 5 பெண்கள் ஹெரோயின் போதைக்கு அடிமையாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு ஒன்றில் சிறுமி ஒருவர் போதைப்பொருள் என்று தெரியாமல் போதைக்கு அடிமையாகியுள்ளார்.

குறித்த சிறுமி எப்படி போதைப்பொருளுக்கு அடிமையானாள் என விசாரணை நடத்திய போது, ​​போதைப்பொருள் பாவனையாளர்கள் பயன்படுத்திய சில பொருட்களை சிறுமி தவறாக கையாண்டு வாயில் போட்டுள்ளார்.

இதனையடுத்து, போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தும் பொருட்களையே சிறுமி பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Von Admin