பியோனா புயல் தாக்குதலினால் அட்லாண்டிக் கனடா பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது.

நோவா ஸ்கோட்டியாவில் 267000 மின்சார பாவனையாளர்களும், மாரிடைம் பகுதியில் 82414 மின்சார பாவனையாளர்களும், நியூ பிரவுன்ஸ்வீக்கில் 20600 மின் பாவனையாளர்களும் மின்சார பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான மழை மற்றும் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. புயல் காற்று காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Von Admin