• Mo.. Jan. 20th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை!

Sep. 25, 2022

யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி நாடகமும், அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்கு பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை (21-09-2022) இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed