நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற 17 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவர் பயாகல பொலிஸ் வஸமேகலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் ரன்முத்து தேரன் சில்வா என்ற பாடசாலை மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 24ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாடசாலை நண்பர்கள் இருவர் வீட்டிற்கு வந்திருந்த போது பயாகல கடலில் அவர்களுடன் நீராடச் சென்ற போது அலையில் சிக்கி இந்த மாணவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன  மாணவன் மற்றும் நண்பர்கள் இருவர் கடற்கரையில் உள்ள கல் சுவருக்கு அருகில் நீந்திக் கொண்டிருந்தபோது திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த ஒருவர்  கடலில் குதித்து அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த மற்ற இரு மாணவர்களை மீட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி மதியம் காணாமல் போன மாணவனின் வீட்டில் பிறந்தநாள் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

காணாமல் போன மாணவனின் சடலத்தை தேடும் பணியில் பயாகல பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Von Admin