• Fr.. Mai 9th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக உயர்வடைந்த இலங்கை ரூபா.

Sep. 28, 2022

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 359.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது,

அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 355.48 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 340.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 395.71 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 380.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed