மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம்(30) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 5.30 மணி முதல் காலை 8.00 மணி வரை இரண்டரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக வலயங்களின் கீழ் (CC)உள்ள பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையான பகுதியினுள் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

M,N,O,X,Y,Z மற்றும் கொழும்பு வர்த்தக வலயங்களின் கீழ் (CC)உள்ள பகுதிகளுக்கு ஏனைய வலயங்களை விட 10 நிமிடங்கள் அதிகமாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Von Admin