சந்தையில் சட்டவிரோத மதுபான போத்தல்களை உடனடியாக இனங்காண்பதற்காக மதுவரித் திணைக்களம் கணினி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மதுபான போத்தலில் ஒட்டப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிக்கரில் உள்ள QR குறியீட்டை ஸ்மார்ட் கைப்பேசி மூலம் சம்பந்தப்பட்ட கணினி செயலியின் ஊடாக ஸ்கேன் செய்ய முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தச் செயலியின் மூலம் தேவையான தகவல்களைப் பெற முடியாமல் அது நிராகரிக்கப்பட்டால், அந்த சந்தர்ப்பத்திலேயே செயலி ஊடாக முறைப்பாடு செய்ய முடியம் எனவும் உடனடியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் திணைக்களம் தெரிவிக்கிறது.

“EXCISE TAX STAMP VALIDATOR” எனப்படும் இந்த ​செயலியை அனைத்து ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் மற்றும் ஆப்பிள் கைப்பேசிகள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

(01) முதல் வாடிக்கையாளர்கள் உரிய செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதன் ஊடாக தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

Von Admin