உலக நாடுகளை அச்சுறுத்தும் கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொவிட் வைரஸ் பெருந்தொற்றையடுத்து கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

ரஷ்ய வௌவால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்தவொரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது கொவிட் வைரஸ் பெருந்தொற்று உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் அறிவித்த நிலையில், இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

இந்த வைரஸ் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

1. கோஸ்டா-2 மற்றும் SARS-CoV-2 ஆகியவை sarbecoviruses எனப்படும் கொரோனா வைரஸ்களின் துணை வகையைச் சேர்ந்தவை.

2. கொவிட்க்கு எதிராக முன்னெடுத்து வரும் தடுப்பூசி பிரச்சாரங்களுக்கு கோஸ்டா-2 அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு கூறுகிறது.

3. sarbecoviruse இருந்து பாதுகாக்க உலகளாவிய தடுப்பூசிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தற்போதைய ஆய்வு எடுத்துக்காட்டுகிறதுது.

4. கோஸ்டா-1 மற்றும் கோஸ்டா-2 வைரஸ்கள் 2020 இன் பிற்பகுதியில் ரஷ்ய வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டன.

5. இரண்டுமே ஆரம்பத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

6. கோஸ்டா-1 மனிதர்களுக்கு குறைந்த ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர், ஆனால் கோஸ்டா-2 சில தொந்தரவான பண்புகளை வெளிப்படுத்தியது.

7. SARS-CoV-2 போன்ற இரண்டாவது வைரஸுடன் கோஸ்டா-2 மீண்டும் இணைவதற்கான ஒரு  ஆபத்து உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.