• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ராசி மாறும் சுக்கிரன்; இவர்களுக்கெல்லாம் யோகம்

Okt 6, 2022

நவம்பர் 2022 இல், பல கிரகங்கள் தங்கள் ராசியையும் இயக்கத்தையும் மாற்றவுள்ளன. கிரகங்களின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். அந்தவகையில் சுக்கிரன் கிரகத்திலும் மாற்றம் நிகழவுள்ளது.

ஜோதிட சாஸ்திரப்படி நவம்பர் 11 ஆம் திகதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறவுள்ளார். பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிரனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும்.

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பண வரவுடன் உத்தியோகம் மற்றும் தொழிலிலும் நல்ல பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாக உள்ளார். இந்த காலத்தில் செய்யும் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். இப்போது முதலீடு செய்ய தகுந்த நேரமாக இருக்கும். மேலும் பல நல்ல பலன்களையும் பெறலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் தொழிலில் லாபம் தரும். வணிக பரிவர்த்தனைகளும் நன்மை தரும். இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக இருக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு சுக்கிரன் அதிபதியாக உள்ளார்.

வீட்டில் சுபிட்சம் கூடும். புதிய தொழில் தொடங்கவும் திட்டமிடலாம். இந்த நேரத்தில் வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்

துலா ராசியின் எட்டாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன். வருமான ஆதாரம் அதிகரிப்பதன் மூலம் பண ஆதாயங்கள் உண்டாகும். முதலீடு செய்வதற்கும் இது நல்ல நேரமாக இருக்கும்.பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறலாம்.

மகரம்

சுக்கிரன் மகர ராசிக்காரர்களுக்கு பத்து மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். உங்களுக்கு நிதி ஆதாயம் ஏற்படக்கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு ஊதியம் அதிகரிக்கலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கௌரவமும் கூடும். இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதியாக இருக்கிறார் சுக்கிரன். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி காண்பார்கள்.பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed