யாழ்- வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல லட்சம் மக்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பக்தர்களுடன் கலந்திருந்த திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இதன்போது சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடப்ட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 7 பேர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். 

Von Admin