மக்கள் நடமாட்டம் அதிகமான ஆட்டோ தரிப்பிடத்திலிருந்து ஆட்டோ ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (12) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக வாடகை ஓட்டத்திற்காக தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றினைநேற்றுமுன்தினம் மாலை (11) நபரொருவர் எடுத்துச் செல்வதை அவதானித்த பிறிதொரு ஆட்டோ சாரதி,ஆட்டோ உரிமையாளருக்கு குறித்த சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தார். 

இதனையடுத்து, அதன் உரிமையாளரும், அருகில் நின்றோரும்குறித்த நபரை விரட்டிச் சென்று வவுனியா நீதிமன்றத்திற்கு அண்மித்ததாக மடக்கிப் பிடித்ததுடன், வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசாரிடம் மடக்கிப் பிடித்த குறித்த நபரை ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Von Admin