இலங்கையின் மின்சாரா கட்டணத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நூற்றுக்கு 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Von Admin