யாழ்ப்பாணத்தில் காணப்படும் மிகப்பெரிய வளமான பனை மரத்தின் உச்சப் பயனை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிலும் பனை சார் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பனை மரத்தில் ஏறி குருத்து ,பதநீர்,பனம் பழம் உள்ளிட்டவற்றை பறிக்க வேண்டி உள்ளது. இதற்கு சீவல் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இதனை இலகு படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனம் மற்றும்,பனை சார்பான நிறுவனமும் இணைந்து இயந்திரம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து பெக்கோ இயந்திரம் போன்று உருவ அமைப்புக் கொண்ட குறித்த இயந்திரத்தின் உயர்த்தி மூலம் பனை மரத்தின் உச்சி வரை சென்று பனை சார் பொருட்களை பறிக்க முடியும் முடியும்.

குறித்த இயந்திரத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை யாழ்ப்பாணம் மாதகலில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Von Admin