வவுனியா  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவமானது வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேற்று (26-10-2022) இடம்பெற்றுள்ளது.

 கண்டியில் இருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பாரவூர்தி சாரதியான அம்பத்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சமித்த அத்தலங்க பன்டார என்பவரே காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin