யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாதையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சடலத்தை உரியவர்கள் அடையாளம் காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.