பிரான்ஸ் இல்து மாகாணத்துக்குள் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆய்வினை, INSEE நிறுவனம் மெற்கொண்டுள்ளது.

இல்து பிரான்சுக்குள் 1.25 மில்லியன் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 22 சதவீதமானோர் வெளிநாட்டவர்களாவர் என இந்த ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்த எண்ணிக்கையானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இவர்கள் பிரதானமாக, உணவகம் மற்றும் உணவகம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

அதையடுத்து, வீட்டு உதவியாளர்கள், வீட்டு பணியாளர்கள், கட்டிட தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் திறன் அடிப்படையிலான பொது பணிகளில் ஈடுபடுகின்றனர்.

வெளிநாட்டு பணியாளர்களில் 38 சதவீதமானவர்கள் பிரெஞ்சு குடியுரிமை கொண்டுள்ளார்கள் எனவும், ஏனையவர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், சட்டவிரோதமாகவும் பணிபுரிகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களில் சமையல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் 50 சதவீதமானவர்களாகும் மற்றும் வீட்டுப் பணியாளர்களில் 61 சதவீதம் குடியேறியவர்கள் பணியாற்றுகின்றனர்.

இல்து பிரான்ஸில் டிப்ளோமாவுடன் கிட்டத்தட்ட 40,000 வேலை செய்யும் புலம்பெயர்ந்தோர் சாதாரண ஊழியர்களாக வேலை செய்கிறார்கள்.

இந்த வெளிநாட்டவர்களில் 27 சதவீதமானவர்கள் மக்ரெப் நாடுகளான அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் துனிசியாவை சேர்ந்தவர்கள்.

18 சதவீதமானவர்கள் இலங்கை, இந்தியா உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இன்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Von Admin