மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் கஹடகஸ்திகிலிய-ரத்மல்கஹா வெவ பிரதான வீதியில் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

சம்பவத்தில் உயிரிழந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

Von Admin