கனடாவின் எட்மோன்டன் பகுதியில் ஒரே நாளில் சுமார் இருபதாயிரம் பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

நோய்வாய் காரணமாக பள்ளி மாணவ மாணவியரின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது.

கடந்த புதன் கிழமை எட்மோன்டன் பகுதியில் 20500 மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி முதல் 9ம திகதி வரையில் 50 முதல் 75 வீதம் வரையிலான பள்ளிகளில் மாணவர் வருகை 10 வீதத்தை விடவும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர் வருகையில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி காரணமாக பள்ளிநிர்வாக சபைகள் அவசர கூட்டங்களை கூட்டி இது குறித்து ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது வரையில் முக கவசங்களை கட்டாயமாக்குவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என பள்ளி நிர்வாக சபைகள் தெரிவித்துள்ளன.

சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் நிலைமைகளினால் பள்ளி மாணவர்களின் வருகையில் சடுதியான வீழ்ச்சி பதிவாகியுள்ள குறிப்பிடத்தக்கது.

குளிர்காலத்தில் பள்ளி மாணவ மாணவியர் நோய்வாய்படும் சாத்தியங்கள் வெகுவாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Von Admin