• So.. Mai 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவில் கடலுக்குள் காணாமல் போன இளைஞன்!

Nov. 20, 2022

முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் இறால் எடுக்க சென்ற இளைஞன் கடல் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் இறால் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 அகவையுடைய செ.நிசாந்தன் என்ற இளைஞனே கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் கடல் சீற்றம் காரணமாக உடலம் இதுவரை கிடைக்கவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed