• Do.. Mai 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

போலி கடவுச்சீட்டுடன் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது!

Dez. 17, 2022

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள் வந்த அதே விமானத்தில் மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வருவதற்காக வீசா அனுமதியைப் பெறுவதற்காக குறித்த இருவரும் நோர்வே கடவுச்சீட்டுகளை முன்வைத்த போது, ​​அவை போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed