• Di.. Mai 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நீரில் மூழ்கி சிறுமி பலி

Dez. 24, 2022

சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

சிறுவர்கள் பலருடன் தாமரைக்கேணியில் நீராடிக் கொண்டிருக்கும் போதே சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்த சிறுமி ஏறாவூர் தக்வா பள்ளி வீதியைச் சேர்ந்த மர்சூக் பாத்திமா றினா என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் உடலை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சென்று பார்வையிட்டு சடலத்தை பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed