• So.. Mai 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Jan. 23, 2023

கனடாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே வீடுகள் விற்பனை மோசடி சம்பவம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட அடிப்படையில் சில கும்பங்கள் மோசடியான முறையில் உரிமையாளர்களுக்கு தெரியாமல் வீடுகளை விற்பனை செய்வதாகவும், அடகு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல தனியார் புலனாய்வு நிறுவனமொன்று இந்த மோசடி பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் வீடுகள் விற்பனை செய்தல் மற்றும் அடகு வைத்தல் தொடர்பான சுமார் 30 சம்பவங்கள் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ளது.

றொரன்டோ பெரும்பாக பகுதியில் இந்த வீடுகள் மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆவணங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed