• Mo.. Mai 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையர்களுக்கு கனடா மகிழ்ச்சி தகவல்;

Juni 6, 2023

தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதில் சுகாதார துறை,விஞ்ஞான,தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள் தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் ஒப்பந்த பணிகள்போக்குவரத்து விவசாயம் மற்றும் விவாசய உணவு ஆகிய ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழியாற்றல் காணப்பட்டால் அதுவும் விசேட தகைமையாகக் கருத்திற் கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த பிரதான ஐந்து துறைகளைச் சேர்ந்த 82 தொழில்களுக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ப்ரேசர் அறிவித்துள்ளார்.

நாட்டில் தொழிற்சந்தையில் சில துறைகளில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் துறைசார் சிறப்புத் தேர்ச்சியுடைய தகுதியான பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed