• Fr.. Mai 9th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சில் விபத்துக்குள்ளான ஆசிரியை மரணம்

Aug. 21, 2023

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும் பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சினி எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு கிளிநொச்சியிலிருந்து கணவருடன் உந்துருளியில் வட்டக்கச்சி நோக்கி பயணிப்பதற்காக கிளிநொச்சி நகர் ஏ-9 வீதியில் காக்கா கடைச் சந்தியில் வட்டக்கச்சிக்கு திரும்பும் போது எதிர்பக்கம் வந்த காருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த ஆசிரியர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed