• So. Nov 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Aug 21, 2023

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 28 சதமாக காணப்பட்டது.

அத்துடன் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 59 சதமாக பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed