வவுனியாவில் நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த 2 வயது சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில், தற்போது மாயமாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி சிறுமி உயிரிழந்திருந்தார்.லிங்கராசா தீபிகா (2) என்ற சிறுமி வீட்டு கிணற்றுக்கு அருகில் இருந்த நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். சிறுமியின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது.

இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில், அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து சிறுமியின் சடலம் மாயமாக உள்ளமை தற்போது தெரியவந்துள்ளதுடன். இது தொடர்பில் பொலிசாரும் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Von Admin