சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பெண் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்து கொண்டு வந்த 01 கிலோ 788 கிராம் நிறையுடைய தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய இந்தியப் பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Von Admin