முருக பெருமானை மனமுருக வேண்டி கந்த சஷ்டி, கந்த குரு கவசங்களை பாடுவது அளவற்ற அருளை நமக்கு வழங்கும்.

அறுபடை வீடு கொண்டு தமிழ் கடவுளாய் நிகரற்று விளங்கும் முருகபெருமானை அவருக்கு உகந்த நாட்களில் விரதம் இருந்து வழிபடுவது வாழ்வில் இன்னல்களை போக்கி சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறது. முருக பெருமானுக்கு உகந்த விரத நாட்களில் உரிய முறையில் விரதம் இருப்பதுடன் முருக மந்திரமான கந்தசஷ்டி, கந்த குரு கவசம் பாடி துதிப்பது ஏராளமான நன்மைகளை தரும்.

கந்த கவசம் பாடுவதால் மனதில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. மனதில் உள்ள துக்கங்கள், தீய எண்ணங்களை கவச பாடல்கள் அழித்து மன அமைதியை தோற்றுவிக்கும். தொடர்ந்து முருக கவச பாசுரங்களை உச்சரிக்கும்போது நவகிரகங்களின் அருளும் பரிபூரணமாக நம் மீது விழுவதுடன் வீட்டை அண்டியிருக்கும் பீடைகள் அடியோடு அழிந்துவிடும்.

தினம்தோறும் காலை கவசம் பாடி முருகனை வேண்டுவதால் நம் மதிப்பு, மரியாதையும் உயரும். முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமைகளில் மூன்று முறை கவசம் பாடுவது நிகரற்ற பலன்களை தரும்.

கவசத்தை முழுவதுமாக பாட இயலாவிட்டாலும் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி பிறர் கவசம் பாட கேட்பதோ அல்லது குறிப்பிட்ட சில பத்திகளை பாடுவதோ கூட முருகபெருமானின் அருள் கிடைக்க வழிவகுக்கும்.

Von Admin